advertisement

சென்னை- கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

அக். 13, 2026 4:37 முற்பகல் |

 

சென்னை: கல்லூரி மாண​வியை பாலியல் வன்​கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து சென்னை மகளிர் நீதி​மன்​றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கோயம்​பேடு பகு​தி​யைச் சேர்ந்த கல்​லூரி மாணவி ஒரு​வருக்​கும், அதே பகு​தி​யைச் சேர்ந்த மணி​கண்​டன் என்ற இளைஞருக்​கும் இடையே பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது.அந்த மாண​வியை அவர் கட்​டாயப்​படுத்தி பாலியல் ரீதி​யாக உறவு கொண்​ட​தாக மாணவி அளித்த புகாரின்​பேரில் கோயம்​பேடு அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த சென்னை மகளிர் நீதி​மன்ற நீதிபதி பிர​பாகரன், குற்​றம் சாட்​டப்​பட்ட மணி​கண்​ட​னுக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை மற்​றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​துள்​ளார். பாதிக்​கப்​பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 7.50 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​க​வும் நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement