advertisement

பரமக்குடி வியாபாரிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

அக். 13, 2026 6:12 முற்பகல் |

பரமக்குடியில் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டண வரி விதிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பரமக்குடி வியாபாரிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

வியாபாரிகளையும், பொது மக்களையும் பெரிதும் பாதிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டண வரி விதிப்பு சிறு குறு வணிகர்கள், அனைத்து துறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டண வரிவிதிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி  பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பரமக்குடி வியாபாரிகள் சங்க அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பரமக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராசி என்.போஸ் தலைமை தாங்கினார். சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், பரமக்குடி சங்க துணைத் தலைவர்கள் எஸ். வி. சுப்பையா, அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் மா. மணவாளன் அனைவரையும் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் , டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டண வரி விதிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்,  சங்க இணைச் செயலாளர் ஜெயம் அத்வான் , நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஆர் . சதிஷ்குமார் ஆகியோர் வியாபாரிகளையும், பொது மக்களையும் பெரிதும்  பாதிக்கக் கூடிய டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டண வரி விதிப்பு குறித்து விளக்கமாக எடுத்துரைத்ததுடன், கட்டண வரி விதிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.பரமக்குடி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement