advertisement

இலங்கைக்குக் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்

அக். 13, 2026 6:17 முற்பகல் |

இலங்கைக்குக் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 40 மூடை பீடி இலைகளைக் கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டினம் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கியூபிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், ஆகியோர் அடங்கிய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் இன்று (13ம் தேதி) அதிகாலை 02.40 மணியளவில் வீரபாண்டியபட்டினம் சூர்யா டிம்பர் டிப்போ வடபுறம் கடற்கரைக்குச் செல்லும் வழியில் சோதனையிட்டபோது, இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 மூடை பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

 இக்கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். கடத்தலில் ஈடுபட்டுத் தப்பியோடிய நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் ஆகும்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement