நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் அவர்கள் மற்றும் நெல்லை கோட்டத்தின் தலைவர் தங்க மனோகர் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, வெங்கடேசன், சிவலிங்கம் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயச்சந்திரன் , சீனிவாசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ் ராமர், சிவசுப்பையா முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் 48 பெண்களும் 100 கும் மேற்பட்ட ஆண்களும் இந்து முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்