advertisement

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு

அக். 13, 2026 6:08 முற்பகல் |


அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரிய கூடிய ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த திட்டமிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 4-ந்தேதி, உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜூலை 5-ந்தேதி தேர்வு நடைபெற்றது.833 மையங்கள்தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 833 மையங்களில் சிறப்பு தகுதித்தேர்வு நடந்தது. முதல் தாள் தேர்வு 221 மையங்களிலும் 2-ம் தாள் தேர்வு 612 மையங்களிலும் நடைபெற்றது.

முதல் தாள் தேர்வை 59,535 பேரும், 2-வது தாள் தேர்வை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேரும் எழுதியிருந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement