பரமக்குடியில் விழிப்புணர்வு பேரணி
பரமக்குடியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவினையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச. வினோதினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவினை (5.10.2026 முதல் 12.10.2026) முன்னிட்டு, பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், பரமக்குடி சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ். மாணவர்கள் மூலம், தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி பரமக்குடி சார் ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
பேரணியானது பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காந்திஜி ரோடு, பெரிய கடை வீதி, காந்தி சிலை, ஆர்ச் வழியாகச் சென்று பரமக்குடி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியில் பரமக்குடி வட்டாட்சியர் ரெங்கராஜூ, சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் தனசேகரன் , மண்டலத் துணை வட்டாட்சியர்கள், உள்வட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்