நெல்லை அரசு ஊழியரிடம் ஆன்லைன் மோசடி: 3 பேர் கைது
நெல்லையை சேர்ந்தவர் அனந்தப்பன் ( 61). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், என்.ஐ.ஏ. போலீஸ் துறையின் மூத்த இன்ஸ்பெக்டர் சந்தீப்ராஜ் என்று அறிமுகம் செய்துள்ளார். பின்னர் உங்களில் வங்கி கணக்கில் இருந்து தீவிரவாதிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளது என கூறி டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி உள்ளார். மேலும் அவரது வங்கி கணக்கு எண் மற்றும் சேமிப்புத்தொகை விவரங்களை வாங்கி, ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.28.5 லட்சம் பணத்தை அனுப்பி மோசடி செய்து உள்ளனர்.
இது குறித்து அனந்தப்பன் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கும்பல் இந்த மோசடியில் ஈடு பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளத்துக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று மோசடியில் ஈடுபட்ட எர்ணாகுளம் நெடுவெளிகாட்டை சேர்ந்த ரவிக்குமார் (52), விஸ்வபுரத்தை சேர்ந்த தினேஷ் (52) கண்ணூர் மாவட்டம் எடக்காடு பகுதியை சேர்ந்த அப்துல் சமது (50) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.





கருத்துக்கள்