கவிஞர் சோதுகுடி சண்முகத்துக்கு விருது வழங்கி கெளரவிப்பு
கவிஞர் சோதுகுடி சண்முகத்துக்கு ஐகானிக் எஜூகேசன் எக்சலன்ஸ் அவார்டு 2026 வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கற்றுக் கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.... யாரிடமெல்லாம் கற்கின்றோமோ அவர்களே ஆசிரியர்கள் என்ற உயரிய தத்துவத்தை பல துறைகளில் பலர் பயன்பெற வழிகாட்டும் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், சோதுகுடியை சேர்ந்த முத்தழகு-நாகம்மாள் தம்பதியரது மூன்றாவது மகனான கவிஞர் சோதுகுடி சண்முகன் என்று அழைக்கப்படும் மு.சண்முகநாதனுக்கு சென்னை ஒய் எம் சி எ , ஸ்கூல் வாய்ஸ் அசோசியேசன் சார்பான ஐகானிக் எஜூகேசன் எக்சலன்ஸ் அவார்டு 2026 விருதானது தமிழ்நாடு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சென்னை வேப்பேரியில் ஒய் எம் சி எ யில் தமிழ்நாடு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுகன்யா ஆகியோர் களது தலைமையில் ஒய் எம் சி எ யின் ஜெனரல் செக்ரட்டரி ஆசிர் பாண்டியன், சேர்மன் ஆல்பர்ட் பெர்னான்டோ, ஸ்கூல் வாய்ஸ் அசோசியேசன் ஸ்டேட் பிரசிடென்ட் மார்டின் கென்னடி, ஸ்டேட் ஜெனரல் செக்ரட்டரி ஜான் ஆரோக்கிய பிரபு ஆகியோரின் முன்னிலையில் விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் தனியார் பள்ளிகளின் தாளாளர் , முதல்வர்களுக்கு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஆளுமையை தன்னகத்தே கொண்டு சாலைக்கிராமம் நல்மேய்ப்பர் பதின்மப் பள்ளியில்முதல்வராக பணியாற்றும் மு.சண்முகநாதனுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.தலைமுறைகளை தன் செயல்முறைகளின் முகவரியாக மாற்றும் மாண்பு கொண்ட விருதாளரின் ஆளுமை போற்றுதலுக்குரிய ஒன்றே .
விருது பெற்ற நல் மேய்ப்பர் பதின்மப் பள்ளி முதல்வரும் , கவிஞர், ஆன்மீகவாதி மு. சண்முகநாதனை பள்ளியின் தாளாளர் உள்பட பள்ளியினர், கல்வியினர், பெற்றோர்கள், குடும்பத்தினர்கள், கவிஞர் பெருமக்கள், கல்வி - சமூக ஆர்வலர்கள், ஆன்மீகத்தினர்கள், அன்புள்ளங்கள் , நகரின் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பிலும் பாராட்டு மழை குவிந்த வண்ணமாய் உள்ளது.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.





கருத்துக்கள்