advertisement

சென்னை : கஞ்சா விற்​பனை​யில் இறங்​கிய இளைஞர்​கள் 3 பேர் கைது

அக். 14, 2026 6:01 முற்பகல் |

பல்லாவரத்தில் ​விரை​வில் பணக்​காரர்​களாகும் ஆசை​யில் கஞ்சா விற்​பனை​யில் இறங்​கிய இளைஞர்​கள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திருநீர்​மலை சுடு​காடு அருகே நேற்று 3 இளைஞர்​கள் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் சுற்​றித் திரிவ​தாக சங்​கர் நகர் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.இதையடுத்து அங்கு சென்ற போலீ​ஸார், 3 பேரை​யும் பிடித்து விசா​ரித்​தனர். அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாகப் பதிலளித்​த​தால், அவர்​கள் வைத்​திருந்த பையைச் சோதனை​யிட்​டனர்.அதில் சுமார் ஒன்​றரை கிலோ கஞ்சா இருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து கஞ்​சா, 2 செல்​போன்​களைப் பறி​முதல் செய்த போலீ​ஸார், 3 பேரை​யும் கைதுசெய்து விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் அனகாபுத்​தூர் கஸ்​தூரி​பாய் நகரைச் சேர்ந்த ராஜா (25), ஸ்டீபன் ராஜ் (28), பல்​லா​வரம் கண்​டோன்​மென்ட் பாரத் நகரைச் சேர்ந்த நிர்​மல் ராஜ் (24) என்​பது தெரிய​வந்​தது.ஆந்​தி​ரா​விலிருந்து மொத்​த​மாக கஞ்​சாவை வாங்கி வந்​து, விற்​பனை செய்ய முயன்​ற​போது போலீ​ஸாரிடம் சிக்​கியுள்ளனர். 3 பேர் மீதும் வழக்​குப் பதிவுசெய்த போலீ​ஸார், அவர்​களை தாம்​பரம் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement