advertisement

தூத்துக்குடி- மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி

அக். 12, 2026 6:09 முற்பகல் |

 

தூத்துக்குடி கே. வி. எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் 8வது ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது 

தொடக்க விழாவிற்கு பள்ளி தலைவர் கே. எஸ். எஸ். ஏ. திராவிட மணி தலைமை தாங்கினார் செயலாளர் டி .ஆர். தமிழரசு முன்னிலை வைத்தார் பள்ளி தலைமை ஆசிரியை  மெலிண்டா சூசன் தாமஸ் வரவேற்புரை ஆற்றினார் தூத்துக்குடி மாவட்ட செஸ்  அசோசியேசன் தலைவர் ஜோ. பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார் 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன்னாள் டைரக்டர் சி. எஸ். ஆர் .அசோக் கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார் 

இப் போட்டியில் மாவட்ட முழுவதும் 70க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 340 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இப் போட்டிகள் 8 வயது.10 வயது 12 வயது 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள்  நடந்தது இப் போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற முதல் 10 பேர்கள் வீதம் 80  மாணவ மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை தென் பாகம் காவல்துறை ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் மற்றும் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்விழா முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை கிறிஸ்டோபல் ஜூடி  மோத்தா நன்றி கூறினார்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement