advertisement

ஜெம் வீரமணி வழக்கில் கைதான கணேசனுக்கு 3 நாள்  காவல்

அக். 23, 2026 10:01 முற்பகல் |

 

சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கெனவே கணேசன் தவிர்த்து 3 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் தற்போது கணேசன் உள்ளிட்ட 4 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன், சிறப்பு புலனாய்வுக் குழுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட நீதிபதி, கணேசனை மட்டும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement