advertisement

துப்பாக்கி உரிமங்களை டிச. 31-க்குள் புதுப்பிக்க தூத்துக்குடி ஆ்ட்சியர் அழைப்பு

அக். 24, 2026 4:48 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உள்ளிட்ட படைக்கல உரிமங்களின் புதுப்பித்தல் காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், உரிமதாரர்கள் அதற்குள் உரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துப் புதுப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.வ

டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்காதவர்கள், 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் தங்களிடமுள்ள படைக்கலனை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது படைக்கலங்களைப் பாதுகாக்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமோ கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் படைக்கலச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் எச்சரித்துள்ளார்.


 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement