advertisement

தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்களுக்கு நன்றி - சீமான்

அக். 24, 2026 9:34 முற்பகல் |


 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் போது, தமிழக முதலமைச்சர் விஜய் பங்குபெற்ற பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட சிலர் அக்டோபர் 20-ம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் அக்டோபர் 22-ம் தேதி தாராபுரம் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவரின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றியினை தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

டெல்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பாக, சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்

இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்.என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement