சிவகங்கையில் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ்-2 மாணவி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 17 வயது பிளஸ்-2 மாணவி,படித்துவருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் தன்னுடைய சகோதரருடன் அந்த மாணவி மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார்.அப்போது அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு சகோதரர் சென்றநிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் தன்னுடைய தோழி ஒருவருக்கு போன் செய்து தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாகவும், தற்போது அவர்களிடம் இருந்து தப்பி சிவகங்கை பஸ் நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் அந்த மாணவி குறித்து பதறிய தோழி, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்த மாணவியை மீட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மாணவி கடத்தப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் பள்ளிக்கூடம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அந்த மாணவியை அவரது சகோதரர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பள்ளி அருகே இறக்கி விடுவதும்,. பின்னர் அந்த மாணவி அந்த வழியே வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது.இதனால் அந்த மாணவி கடத்தப்பட்டதாக நாடகமாடியதை போலீசார் உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த மாணவியை மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துக்கள்