திருப்புவனம் அஜித் குமார் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல்துறை விசாரணையில் பலியான அஜித் குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கிய தவெக தலைவர் விஜய்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் கோயில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் அஜித்குமார். சாமி கும்பிட வந்த நிகிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக பலியானார்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெகவும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை தவெக தலைவர் விஜய், அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாய்க்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
கருத்துக்கள்