பரமக்குடியில் புத்தகதிருவிழா - அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பட்டிமன்றம்
பரமக்குடியில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா வில் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பட்டிமன்றம் நடைபெற்றது .
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ராஜா திருமண மகாலில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா
நடைபெற்று வருகின்றன.புத்தகத் திருவிழாவின் ஆறாவது நாள் நிகழ்வாக பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி மாணவியர்கள் பட்டிமன்ற நிகழ்வை நடத்தினர். " அறிவை வளர்க்க பெரிதும் உதவுவது புத்தகமா " ?
" இணையமா " ? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது .இன்றைய காலகட்டத்தில் புத்தக அறிவு மிகவும் அவசியம். மேலும் இணையமும் தேவை என முடித்தனர்.
பள்ளி , கல்லூரி மாணவர் - மாணவியர்கள் கலைநிகழ்ச்சி நடந்தன. ஜவ்வாது பள்ளியின் மாணவர் - மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி அசத்தினர். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தலைப்பில் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஹுசேன் மன்பாஈ என்பவர் சிறப்புரையாற்றினார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்