advertisement

பணி மாறுதல் பெற்ற ஆசிரியரை கட்டிபிடித்து அழுது புலம்பிய மாணாக்கர்கள்.

ஜூலை 31, 2025 5:15 முற்பகல் |

11 ஆண்டுகள் பணிபுரிந்த பள்ளி ஆசிரியர் சு.சோலைராஜா பணி மாறுதல் பெற்று செல்வதால் ஆசிரியரை செல்ல வேண்டாமென அழுது புலம்பிய மாணாக்கர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி ஊராட்சி ஒன்றியம், முத்தரையர் நகர் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சு.சோலைராஜா கடந்த 11 ஆண்டுகளாக ஐந்தாம் வகுப்பு மாணவர் - மாணவியர்களுக்குத் தமிழ் வழி , ஆங்கில வழியில் பாடங்களைப் போதித்து வந்தார். மேலும், கல்வியைத் தாண்டி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பட்டிமன்றம் என தனித் திறன்களை மாணவர் - மாணவியர்களுக்கு வளர்த்துப் போட்டிகள் நடத்திச் சொந்த செலவிலேயே பரிசுகள் வழங்கி வந்தார். ஆண்டு தோறும் ஒரு பட்டிமன்றக் குழுவை ஏற்படுத்தி ஆண்டு விழாவில் அரங்கேற்றம் செய்து வந்தார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர் - மாணவியர்களைக் கொண்டு மதுரை ஆல் இந்திய ரேடியோவில் பட்டிமன்றமும், நாடகமும் நடத்தியுள்ளார். ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவிலும், கலைத் திருவிழாவிலும் மாணவர் - மாணவியர்களைப் பங்கேற்க வைத்துள்ளார்.அதே பள்ளியில், பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 8:30;மணி நேரத்தில் 3000 அடிகளில் திருக்குறள் சார்ந்த கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார் 
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நறுவடி,மாயோள் சதங்கை,பாட்டினில் அன்பு செய் என்ற மூன்று கவிதை நூல்களை வெளியீடு செய்துள்ளார்

கடலாடி ஒன்றியம், கீழச்சிறுபோது தொடக்கப்பள்ளிக்கு  பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து  பள்ளியின் சார்பாக ஆசிரியருக்கு பிரிவு உபச்சார விழா கொண்டாடப்பட்டது.விழாவில், மாணவர்கள் ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல் ஆசிரியரைக் கட்டிப்பிடித்து அழுது போக வேண்டாம் எனவும், மாணவியர்கள் சார் எங்களை விட்டு போகாதீங்க என தேம்பி ... தேம்பி ... அழுது அன்போடு தடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது .
பணி மாறுதலில் சென்றது வருத்தமாக இருந்தாலும். ஆசிரியர்களும், மாணவர் - மாணவியர்களும்,பெற்றோர்களும் பிரியா விடை கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement