இராமநாதபுரத்தில் சுதந்திரதின முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , வருகின்ற ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் , சுதந்திர தின விழா அன்று தியாகிகளை கௌரவித்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் , அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்று வழங்குதல் , பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சி குறித்து திட்டமிடுதல் , பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்று கண்டு களித்தல் ஆகியவற்றிற்கான பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்திட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் கோ.தவச்செல்வம் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்