எமனேஸ்வரம் சௌராஷ்ட்டிரா பேரவை அரங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
எமனேஸ்வரம் சௌராஷ்ட்டிரா பேரவை அரங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம், நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைக்கிறார்.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட "சுதேசி இயக்கத்தினை" நினைவுகூறும் வகையில், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் , தனித்தன்மை, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறையின் பங்களிப்பு, கைத்தறி தொழிலினை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து, கைத்தறி உதவி இயக்குநர் வே.சேரன் உள்ளிட்ட கைத்தறித் துறை அதிகாரிகள் தெரிவித்தாவது :
"11-வது தேசிய கைத்தறி தினத்தைக்" கொண்டாடும் விதமாக பரமக்குடி சரகத்தில் 07.08.2025 வியாழக் கிழமையன்று எமனஸ்வரம் சௌராஷ்ட்டிரா பேரவை அரங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் , நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. விழாவிற்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தசிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். மேலும், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் , பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்பட உள்ளுர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் , நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பரமக்குடி-எமனேஸ்வரம் பகுதியில் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து, பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், சித்த மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை , நவீன ECG பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.மேலும் , கல்லூரி மாணவியர்களிடையே கைத்தறி ஜவுளி இரகங்கள் / பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் கண்காட்சி , விழிப்புணர்வு நிகழ்ச்சி 06.08.2025 , 07.08.2025 ." ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி மகளிர் கலைக் கல்லூரியில்" நடைபெற உள்ளது என கைத்தறித்துறை உதவி இயக்குநர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்