முதுகுளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்- அமைச்சர் முக்கிய வேண்டுகோள்
முதுகுளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வேண்டுகோள் வைத்துள்ளார் .
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ராஜித் சிங் காலோன் முன்னிலையில், தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது :
மக்கள் அரசு அலுவலகங்களை தேடி வந்த நிலையை மாற்றி மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகை தந்து கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையிலான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்கள். இதன் மூலம் நகர் பகுதி முதல் கிராம பகுதிகள் வரை அனைத்து இடங்களுக்கும் அரசு துறைகள் சென்று முகாமிட்டு மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடி நடவடிக்கைக்காக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் , முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிக்கு இம்முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் , நகர்ப்புறத்தில் 15 அரசுத்துறைகளில் 46 சேவைகள் வழங்கிடும் வகையிலும், ஊரகப்பகுதியில் 13 அரசுத்துறைகளில் 43 சேவைகள் வழங்கிடும் வகையில் அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் மனுக்கள் மீது 45 தினங்களுக்குள் தீர்வு வழங்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 30.09.2025 வரை 217 முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி பயன்பெற்றிட வேண்டுமென தமிழ்நாடு வனம் , கதர் துறை
பின்னர் , தோட்டக்கலைத்துறையின் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.நிகழ்ச்சியில் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவணபெருமாள் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோபிநாத் , முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கழகத்தினர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்