advertisement

பரமக்குடி : வகுப்பறைக்கு மாணவி பெயர் வைத்து சிறப்பிப்பு

ஜூன் 13, 2026 6:42 முற்பகல் |

பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி வெ.ஹாஷினி பெயரில் வகுப்பறைக்கு பெயர் வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும்   மாணவர்- மாணவியர்கள் கல்வி , விளையாட்டு, தனித்திறமைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆயிரவைசிய சபை, ஆயிர வைசிய இளைஞர் சங்க டிரஸ்டு , பள்ளி நிர்வாகத்தினரும்பாராட்டி கௌரவப் படுத்துவதில் முன்னுரிமை அளித்து வருவதை நடைமுறை பழக்கமாக கொண்டுள்ளனர்.      அதனடிப்படையில், நடந்து முடிந்த ப்ளஸ்-2 தேர்வில் இப் பள்ளியில் பயின்ற சா.கோ.ரா. வெங்கடேசன் - ப்ரியாவதி தம்பதியரின் பாசப்புதல்வி வெ.ஹாஷினி அதிக மதிப்பெண்கள பெற்று பள்ளிக்கும் , நகருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி வெ. ஹாஷினியை பாராட்டி கௌரவிக்கும் விதமாக பரமக்குடி ஆயிர வைசிய சபை தலைவர் எஸ்.பாலுச்சாமி, இணைத் தலைவர் ராசி என்.போஸ், செயலாளர் எஸ்கேபி. இலெனின் குமார் , பொருளாளர் ஏ.ஆர். சுப்பிரமணியன், சபை நிர்வாகி வக்கீல் செந்தில்குமார் உள்பட ஆயிரவைசிய சபை நிர்வாகிகள், ஆயிர வைசிய இளைஞர் சங்க டிரஸ்டு தலைவர் ராசி என்.போஸ், பொதுச்செயலாளர் எஸ்கேபி. இலெனின்குமார், செயலாளர் ராசி பிரசன்னா, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் , ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ராசி போ. ராஜேஷ்கண்ணா, செயலாளர்கள் ராசி பிரசன்னா, கேடிஆர் . பிரசன்னா, பொருளாளர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் மாணவி வெ. ஹாஷினிக்கு சால்வை அணிவித்து விருதுகள் வழங்கியும் , வகுப்பறைக்கு மாணவி ஹாஷினியின் பெயர் சூட்டியும் கெளரவப்படுத்தி அசத்தியுள்ளனர்.

சாதனை மாணவி வெ. ஹாஷினியை பள்ளி முதல்வர் ஜெயபிரமிளா , பள்ளி ஆசிரிய பெருமக்கள் , பெற்றோர்கள் , கல்வி - சமூக ஆர்வலர்கள் , நகர் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்த வண்ணமாய் உள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement