கேரளா : மனைவியின் கால்களை வெட்டிய கணவர் கைது
கேரளம் மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் பிஜூ (43). இவரது மனைவி கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா (33). கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மல்லிகா கோபித்து கொண்டு கண்ணூரில் இருந்து தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.அங்கு கடந்த சில மாதங்களாக அவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளாை். இந்தநிலையில் நேற்று பிஜூ காரில் பந்தலூருக்கு வந்தார். பின்னர் மல்லிகாவை சமாதானப்படுத்தி கண்ணூருக்கு அழைத்து செல்வதற்காக, அவரிடம் பேசி உள்ளார். பின்னர் தம்பதி காரில் வயநாடு மாவட்டம் மேப்பாடி வரை சென்றனர். இதையடுத்து அங்கிருந்து பந்தலூர் நோக்கி வந்தனர்.
பின்னர் மேங்கோரேஞ்ச் முனீஸ்வரன் கோவில் அருகே பிஜூ காரை நிறுத்தி விட்டு, மல்லிகாவிடம் குழந்தைகளுடன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே காருக்குள் வைத்து மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிஜூ கத்தியால் தனது மனைவியின் 2 கால்களை வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த மல்லிகா வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் அவரை பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிஜூ அனுமதித்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் மல்லிகா அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த தேவாலாபோலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால், அவரது கால்களை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிஜூவை போலீசார் கைது செய்தனர்.





கருத்துக்கள்