advertisement

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல்  கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா!

ஜூன் 13, 2026 10:34 முற்பகல் |

 

நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டின் 22வது பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்த  விழா ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு, துணைத் தலைவர் முனைவர் அமலி கிளிட்டஸ் பாபு ஆகியோர்  தலைமையில்  நடைபெற்றது.  விழாவுக்கு தலைமை விருந்தினராக அக்செஞ்சேர் ஐ.டி  நிறுவன மேலாண்மை இயக்குநர் பால் சுந்தர்சிங் மற்றும் முன்னாள் மாணவரும், பெங்களூரு இந்தோ-ஜெர்மன் சேம்பேர் ஆப் காமெர்ஸ் மண்டல இயக்குநர் மதுசூதனன் விஜய் ஆகியோர் பங்கேற்றனர். 
ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு  22வது பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன்  வரவேற்புரை ஆற்றினார்.  பின்னர் தலைமை  விருந்தினர் பால் சுந்தர்சிங்  பட்டங்களை வழங்கி  பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவியருக்கு அவர் பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன்  பட்டமளிப்பு  உறுதிமொழி  மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவர், மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

இவ்விழாவில், 660 இளங்கலை மற்றும் 140 முதுநிலை பொறியியல் மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். 35 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை  சான்றிதழ்களை பெற்றனர்.  அதில் 17   பேர் தங்க பதக்கம், மற்றும் சான்றிதழ்   பெற்றனர்.  பட்டமளிப்பு விழா  ஏற்பாடுகளை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பேராசிரியர்  ராஜகுமார் செய்திருந்தார். இதனையடுத்து நிறுவனர் கிளிட்டஸ் பாபு  22 வது பட்டமளிப்பு விழா நிகழ்வை முடித்து வைத்தார். 

நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசியதாவது, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களுக்காக எங்களது பேராசிரியர்களும், நிறுவனமும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் வளர்ச்சியடைய வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நன்கு கற்றறிந்து எப்படி உயரவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு  முன்னேற்றமடையவேண்டும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் விசுவாசத்துடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் ஒழுக்கத்துடன்  பணியாற்றவேண்டும். அப்போதுதான் பதவி உயர்வு கிடைக்கும். எந்த நிலைக்கு உயர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.   கல்வி சார் பேராசிரியர் முனைவர் கண்ணன் நன்றியுரையாற்றினார்.
 ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர் (வளர்ச்சி) முனைவர் ஜார்ஜ் கிளிங்டன், பொதுமேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான் கென்னடி,  முனைவர் முகமது சாதிக், லூர்தஸ் பூபாலராயன் மற்றும்  கல்லூரியின் அனைத்து துறை  பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வளாக மேலாளர் .சகாரியா காபிரியேல் சிறப்பாக செய்திருந்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement