advertisement

ராமநாதபுரம் ஐடிஐ.யில் கல்லூரி முதல்வர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

ஜூன் 13, 2026 10:27 முற்பகல் |

ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்லூரி முதல்வர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது .

கூட்டத்தில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது :      ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி படிப்பு , தொழில்நுட்ப கல்வி படித்த மாணவர் - மாணவியர்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வதை நாம் காண முடிகிறது. இந்நிலையில் அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒய்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறமையும், இலட்சியமும் கண்டிப்பாக இருக்கும். அதை முதல்வர்களாகிய நீங்கள் கண்டறிடந்து அவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்க தக்க அறிவுறையும், ஆலோசனையும் வழங்கும் பொழுது அவர்கள் நினைத்த பாதையில் செல்ல உங்களுடைய வழிகாட்டுதல் ஒரு தூண்டுதலாக அமையும்.
   இளைஞர்களை பொறுத்த வரை படித்து முடித்ததும் பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்ல நினைப்பார்கள். அவர்கள் தொழில் முனைவோராக மாறும் பொழுது மாவட்டத்தில் பல்வேறு தொழில் மையங்கள் உருவாகுவதுடன் மாவட்டத்திலேயே பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும் பொருட்களின் உற்பத்தி திறனால் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.
       அதனால், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவர்களின் மனநிலையை நன்கு அறிந்து ஒவ்வொரு மாணவரின் திறன் மேம்பாட்டை வெளிக்கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது.
       எனவே , மாணவர்களின் திறனை மேம்படுத்தி தொழில் முதலீட்டாளர்களாக உருவாக்குவது உங்கள் கையில் தான் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
      அதனைத் தொடர்ந்து , அரசு தொழிற்பயிற்சி மையத்தில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டார்.
    நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட மேலாளர் பொன்வேல் , மைய ஒருங்கிணைப்பாளர் சத்யா , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement