திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வருமானம் 4.20 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் வருமானமாக ₹4.20 கோடி ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் நிர்வாக அலுவலக அரங்கில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
கோயில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியைப் பார்வையிட்டார். இணை ஆணையர் ஆ.அருணாசலம் முன்னிலை வகித்தார். இவர்களுடன் துணை ஆணையர்கள் ந.யக்ஞ நாராயணன், கு.கோமதி, உதவி ஆணையர் பி.எஸ்.லோகநாதன், அலுவலகக் கண்காணிப்பாளர் ஈ.சுப்பிரமணியன், ஆய்வர் செந்தில்நாயகி மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் கோவில் பணியாளர்கள் முழுமையாக ஈடுபட்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் முடிவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை விவரங்கள்:ரொக்கப் பணம்: ₹4,20,55,814 தங்கம்: 1,768 கிராம் வெள்ளி: 21,925 கிராம்
பித்தளை: 1,26,640 கிராம் தகரம்: 11,500 கிராம் அந்நியச் செலவாணி: 1,431 வெளிநாட்டு நோட்டுகள் / நாணயங்கள் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக இவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது எண்ணிக்கை முடிவில் தெரியவந்துள்ளது.





கருத்துக்கள்