வெயிலுக்கு இதமாக தென்னந் தட்டிகள் கட்டி வரும் ஆட்டோ - பொதுமக்கள் பாராட்டு
பரமக்குடி நகரில் கோடை வெயிலுக்கு வலம் வரும் ஆட்டோ மேல்புறம் தென்னந் தட்டிகள் கட்டி வருவதால் பொதுமக்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து பகல் வேளைகளில் வெளியில் செல்வதற்கே அச்சமாக உள்ளது.இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகருக்குள் வலம் வரும் ஆட்டோ ஒன்று மேல்புறத்தில் தென்னந் தட்டிகள் கட்டி வருவதால் பிரசவ பெண்கள், பச்சிளம் குழந்தையோடு செல்லும் தாய்மார்கள், பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள், முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் என பொதுமக்கள் அனைவரும் இந்த ஆட்டோவை எதிர்பார்த்து பயணித்து வருகின்றனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றதுடன், பாராட்டிய வண்ணமாய் உள்ளனர்.
மேலும், நகரில் வலம் வரும் அனைத்து ஆட்டோக்களும் இது போன்று தென்னந் தட்டிகள் கட்டி வந்தால் வெப்ப அலைகள் வீசாது ஆட்டோவில் பயணிக்கும் நேரத்தில் குளு ... குளு ... குளுயென ... சென்று வரக்கூடிய திருப்தி கிடைக்குமென நகர் பொது மக்கள் தங்களது ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்