advertisement

சாதி பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு  ரூ.1 கோடி ஊக்கத்தொகை: விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

ஜூலை 21, 2026 10:39 முற்பகல் |

 


சாதி பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி பரிசுடன், தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். 

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்குத் தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய 'சமூக நல்லிணக்க ஊராட்சி விருது' வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசாணை நிலை எண்.9-ன் படி, உரிய செயல்திறன் அளவீடுகள், சமூக நல்லிணக்கத் தரவுகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த ஊராட்சிகள் இப் விருதுக்காகத் தேர்வு செய்யப்படவுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகள் இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகங்கள் அல்லது ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் வேலை நாட்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன், தமிழக அரசின் tn.gov.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள பிரத்யேக லிங்க் அல்லது அதிகாரப்பூர்வ கியூ ஆர் கோட் (QR Code) வாயிலாகவும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement