advertisement

விளாத்திகுளம் எம்எல்ஏ பாளை., மத்திய சிறையில் அடைப்பு

ஜூலை 21, 2026 4:17 முற்பகல் |


விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யை மிரட்டும் வகையில் பேசியதற்காக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை ஜீ.வி.மார்க்கண்டேயனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement