advertisement

தூத்துக்குடி : ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஜூலை 20, 2026 9:19 முற்பகல் |

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயப் பெருவிழா - 2026 வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.. விழாவின் நிறைவு நாள் ஆகஸ்ட் 5ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆக 5 ம் தேதி புதன்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 05.08.2026 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது. 

மாவட்டக் கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு வழக்கம் போல் செயல்படும்.  இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, வரும் 08.08.2026 இரண்டாவது சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வழக்கமான அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement