advertisement

ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஜூலை 20, 2026 10:08 முற்பகல் |

 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 700 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்ததாவது :  ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர், மாணவியர்களுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையாளர்கள் , தன்னார்வலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்  வேண்டுகோள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.காவனூர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மங்களேஸ்வரன்  மாணவர், மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.60,000/-ம் நன்கொடையாக வழங்கினார். இந்த நிதி 03 மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து , ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீன் திருமண அழைப்பிதழ் கார்டு நிறுவனத்தின் உரிமையாளர் பி.தமீம் அன்சாரி  கீழக்கரையைச் சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவி செல்வி எம்.சமீமா பர்வீன் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், ரூ.34,500/- கல்விக் கட்டணத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த நிதியுதவி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டுகள் , வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு 1218800 / = மதிப்பீட்டில் செயற்கை கால்களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர்  திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் , மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி , மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் , மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் லோ.ஜேன் கிறிஸ்டிபாய் , மாவட்ட ஆட்சியர் நிலம் நேர்முக உதவியாளர்  அன்பழகன் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி உள்பட பொது மக்கள், பயனாளிகள், அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement