advertisement

பத்திரிகையாளர்களுக்கும் போலீசாருக்கும் நல்லுறவு வேண்டும்-எஸ்பி., பேச்சு

ஜூலை 21, 2026 10:29 முற்பகல் |

பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஒரு நெருக்கமான உறவு வேண்டும் என தூத்துக்குடி பத்திாிகையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சா் விஜயை கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திங்கட்கிழமை காலை குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்எல்ஏ வை விளாத்திகுளத்தில் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கொண்டு வந்து 11 மணி நேரம் விசாரணை செய்தனர். விசாரணை முடிந்து இரவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ வை கொண்டு வந்தபோது செய்தியாளர்கள் வீடியோ மற்றும் போட்டோ எடுக்க முயன்ற போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு பத்திரிகையாளா்களைஒருமையில் பேசினார். மேலும் ஏடிஎஸ்பி நாக்கை துருத்தி கொண்டு நடந்து கொண்டது அவருக்கும் பத்திாிகையாளா்களுக்கும் கடும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது  

இதனையடுத்து தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவை நேரில் சந்தித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு நடந்து கொண்ட விதம் பற்றி எடுத்துரைத்து கோாிக்கை மனு வழங்கினாா்கள்.  அப்போது பத்திரிக்கையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறுகையில் வரும் காலங்களில் இதுபோல ஒரு நிகழ்வு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன் காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஒரு நெருக்கமான உறவு வேண்டும் அதற்குத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரும் மாதங்களில் மாதத்தில் ஒரு நாள் பத்திரிகையாளர் காவல்துறையினர் நட்புணர்வு இருக்கும் வகையில் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறினார்.
     
அப்போது பத்திாிகையாளா்கள் சண்முகசுந்தரம், ராஜா சிதம்பரம், காட்சன். மோகன்ராஜ்.. அண்ணாதுரை. செந்தில்முருகன், முத்துராமன். ராஜன். விஜயகாந்த். ராமச்சந்திரன் சங்கரநாராயணன், ஜெயக்குமாா், மாரிமுத்து. செய்யதுஅலிசித்திக், மணிகண்டன். ராஜ். விஜய். உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement