இலங்கைக்குக் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே இலங்கைக்குக் கடத்து வதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலைச் செந்தூர் நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குப் படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கீதன், உள்ளிட்ட போலீசார் செந்தூர் நகர் கடற்கரைச் சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இன்று ஜூலை 22 அதிகாலை 4 மணியளவில் அப்பகுதியில் சோதனையிட்ட போது, லோடு வேனில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட தலா சுமார் 35 கிலோ எடை கொண்ட 79 மூட்டை பீடி இலைகள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேசச் சந்தை மதிப்புச் சுமார் ரூ.1 கோடி ஆகும்.
இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குரும்பூர் பழைய தெருவைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.





கருத்துக்கள்