கோவை விமான நிலையத்தில் 5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
மே 22, 2025 11:54 முற்பகல் |
கோவை விமான நிலையத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற சோதனையில், சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக கோவைக்கு வந்த விமானம் ஒன்றில் பயணித்த அனைத்து பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து உயர் தரமான கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. அவை பயணப்பைகள் மற்றும் உடைமைகளில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதனை அடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்தப் பொருட்களை சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் வழியாக கொண்டு வந்ததாகத் தெரிய வந்துள்ளது.
கருத்துக்கள்