advertisement

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய வேதியியல் தினக் கொண்டாட்டம் .

ஆக. 02, 2025 4:29 முற்பகல் |

 

கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை , அறிவியல் மன்றம் ஆகியவை இணைந்து  தேசிய வேதியியல் தினம்  கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் , முனைவர் பி.எல்.சிவக்குமார்  தலைமை தாங்கினார். தேசிய வேதியியல் தினத்தைக் கொண்டாடும் வகையில், வேதியியலில் நம் அன்றாட வாழ்க்கையோடு எவ்வாறெல்லாம் இணைந்துள்ளது என்பதை மையமாகக் கொண்டு நிகழ்வுகள் அமைந்திருந்தது. அதன்படி, வேதியியல் துறை மாணவர் - மாணவியர்கள் ஆய்வக உபகரணங்களைப் பயன்படுத்தி, வேதியியல் வினைகள் , அவற்றின் பயன்பாடுகளைச் செயல்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து , “எங்களைச் சுற்றியுள்ள தனிமங்கள்” எனும் தலைப்பில் அறிவியல் மன்ற மாணவர் - மாணவியர்களின் மௌன நாடகம் நடத்தப்பட்டது. இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தனிமங்கள் நாம் சாப்பிடும் உணவில், பயன்படுத்தும் கருவிகளில், வாழும் சூழலில் எவ்வாறெல்லாம் நிறைந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, வேதியியல் துறைத்தலைவர் முனைவர் வி.பாலகுமார் அனைவரையும் வரவேற்றார். வேதியியல் துறைப் பேராசிரிய பெருமக்கள் சி.நந்தகுமார், முனைவர் ஜி.சங்கமி , அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.வி.நிவேதன், முனைவர் எம்.ஸ்ரீதர், மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்வில் துணை முதல்வர் எஸ்.பூங்குழலி , தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் , பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரிய பெருமக்கள், மாணவர் - மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement