மதுரை தமுக்கம் மைதானத்தில் நூல்கள் வெளியீட்டு விழா.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் , நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மூலமாக 5 நூல்கள் வெளியிடப்பட்டன.
நூல் வெளியீட்டு விழாவிற்கு, காந்திகிராமத் தமிழ்த்துறை தலைவர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் கவிஞர் செல்லப்பா வாழ்த்திப்பேசினார். துணைத் தலைவர் பேனா மனோகரன், திறனாய்வாளர் முருகேச பாண்டியன், கவிஞர் மஞ்சுளா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் தனசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனை ஊக்குவிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
எட்டுத் தொகையில் மரங்கள் என்ற நூலை பேரா.சுமதி வெளியிட தஞ்சை பல்கலைக்கழக பேரா.வீரலட்சுமியும், சமயம் பற்றி என்ற நூலை பேரா.ஆனந்தகுமார் வெளியிட கவிஞர் பேனா மனோகரனும், லெனின் போராட்ட வாழ்க்கை என்ற நூலை கவிஞர் ரவி வெளியிட கவிஞர் செல்லா பெற்றுக் கொண்டார்.
வீரமா முனிவரின் திருக்குறள் இலத்தின் மொழியாக்கம் என்ற நூலை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் நபி வெளியிட , போர்ச்சுகீசு தமிழ் அகராதி என்ற நூலை அரசு அருங்காட்சியக தொல்லியலாளர் மருதுபாண்டி ஆகியோர் வெளியிட தியாகராஜர் கல்லூரி பேரா.சரவணஜோதி பெற்றுக்கொண்டார். மண்டல மேலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
கருத்துக்கள்