திருநெல்வேலியிவ் பாலியல் வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது
ஆக. 12, 2025 11:12 முற்பகல் |
அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பொத்தை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பர்கத் மகபூப்ஜான் மகன் சேக்முகமது (வயது 29) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று, சேக்முகமது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துக்கள்