திருப்பூரில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை;
பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிப்பறையை முன்புறமாக வைக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி, பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் மாநில இளைஞர் ஜெய் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் நேற்று இரவு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அப்பகுதி மக்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியிடம் முறைகேடாக நடத்த ஜெய் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதால், இன்று காலை பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காவல் துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிப்பறையை முன்புறமாக வைக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படவில்லை. தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பெற்றோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தவர்களிடம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வந்தார்கள். இருப்பினும் பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வில் முடிந்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர்.
கருத்துக்கள்