திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் - நயினார் நாகேந்திரன் விருப்பம்
தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, அனைத்து எதிர்க்கட்சிகளும் எந்த பாகுபாடும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்று சேர வேண்டும் என்று தமிழநாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித்தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளி வழங்கிய பின், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கோவிலுக்காக மக்கள் 175 கிலோக்கும் அதிகமாக வெள்ளி வழங்கியிருப்பதாகவும், இது மக்களின் பக்தியை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.கோவிலுக்கான புதிய யானி வாங்கும் முயற்சி குறித்து, உத்தரகாண்ட் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், மத்திய-மாநில அரசுகளின் அனுமதியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பாஜக - அதிமுக கூட்டணி உடைந்துவிடும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் எண்ணம். ஆனால், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி போன்ற அரசியல் நடவடிக்கைகள் மக்களை பாதித்துள்ளன என கூறிய நயினார், ஸ்டாலின் ஆட்சியில் திட்டங்கள் நிறைவேறவில்லை என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
கருத்துக்கள்