நெல்லை அருகே பள்ளி மாணவர் தற்கொலை ?- பேருந்துகள் எரிக்கப்பட்டதால் பதற்றம்!
நெல்லையை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனியார் பள்ளி பேருந்துகள் எரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவனை ஆசிரியர் திட்டியதாகவும், பெற்றோருடன் பள்ளிக்கு வருமாறு கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மன வேதனையடைந்து மாணவன தவறான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவனின் உடலை வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு வைத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் இரண்டு பேருந்துகள் எரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் உடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள்