கவினுடனான உறவு என்ன? காதலி வீடியோ வெளியீடு!
நெல்லையில் கவின் என்ற ஐடி ஊழியர் ஆவணக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கவினுடனான உறவு குறித்து பரபரப்பு தகவலை குறிப்பிட்டுள்ளார்.
நெல்லையில் கவின் என்ற ஐடி ஊழியர் ஆவணக் கொலை செய்யப்பட்ட நிலையில் கவினின் தோழி அதிரடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், என் அப்பா அம்மாவை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தவறு அவர்களை விட்டு விடுங்கள்.கவினுக்கும் எனக்கும் என்ன உறவு என்று எங்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியும். உண்மை தெரியாமல் எனக்கும் கவினுக்குமான உறவு பற்றி யாரும் பேசாதீர்கள். எல்லோரும் எதை எதையோ பேசுகின்றனர் எனது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். நானும், கவினும் காதலித்து வந்தோம்.
இதுகுறித்து எனது பெற்றோருக்கு தெரியும். நானும் கவினும் 6 மாதங்களில் செட்டில் ஆக வேண்டும் என நினைத்து இருந்தோம். ஆனால் அதற்குள் சுர்ஜித், பெண் கேட்டு வருமாறு கவினை அழைத்து சென்றுள்ளார். எனது பெற்றோரை விட்டு விடுங்கள்" என நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தோழி எனக் கூறப்படும் பெண் வீடியோவில் கூறி உள்ளார்.
இந்த வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதற்கிடையே அரசியல் தலைவர்கள் பலரும், கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனா். திமுக எம்பி கனிமொழி, நயினார் நாகேந்தின் உள்ளிட்ட தலைவர்கள் சென்று நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளனா். இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவன் இன்று கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு ஆணவக்கொலைகள் அரங்கேறி வருகிறது. சாதி ரீதியிலான வன்மம், அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை பாதிப்பதுடன், குடும்பத்தின் எதிர்காலத்தை சீரழித்து வருகிறது. இதற்கிடையே கவின் குமாரின் காதலி சுபாஷினிக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என கூறி பலரும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனா்.
கருத்துக்கள்