advertisement

எடப்பாடி பழனிச்சாமியுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

ஆக. 05, 2025 11:37 முற்பகல் |

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன்  திருநெல்வேலி மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினார்கள். 

க்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்...  என்ற புதிய முழக்கத்துடன் அதிமுக பொதுச் செயலாளர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்.செல்லும் இடங்களில் மக்கள்  திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 4-ந்தேதி (திங்கள்) நெல்லை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.நெல்லை மற்றும் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி  கலந்து கொண்டு பேசினார்.

இன்று ( 5-ந்தேதி) தென்காசி மாவட்டத்தில் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.இதற்காக குற்றாலம் இசக்கி ரிசார்டில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் அனைத்து நிர்வாகிகள், மற்றும் வணிகர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அகில இந்திய தலைவரும்,
சமூக சிந்தனையாளருமான  பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்,தமிழக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் மணிநந்தனார் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாவட்ட தலைவர்  சோமசுந்தரம்  தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து  இந்த மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி சில நிமிடங்கள்  உரையாடினார்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சுடலைமுத்து, இசக்கி பாண்டி, மாரியப்பன், புளித்சுரேஷ்,  சிந்து ராஜ், நம்பி, செய்யது அலி ஆஷிக், ஷேக் அமீர் , தாழை மாரிமுத்து, முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement