advertisement

நெல்லை டவுன் 26-வது வார்டில் ஆதார் சிறப்பு முகாம் – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நவ. 03, 2026 4:34 முற்பகல் |

 

நெல்லை டவுன் 26-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நலனைக் கருத்தில்  கொண்டு ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. 

மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளரும் 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபா சங்கரி பொன்னையா பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், இளைஞர் அணி நிர்வாகி சிவசுப்பு, லட்சுமணன், சங்கரன், அறம் வளர்த்த நாதன், வி.எஸ். கார்த்திகேயன் குருக்கள், சின்னத்துரை, மாசாணம், வழக்கறிஞர் கலைசெல்வன். சுரேஷ் 23-வது வார்டு பிரதிநிதி இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மகளிர் அணி நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, கமலா, வைஷ்ணவி, விஜயலட்சுமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement