தூத்துக்குடி- விசிக பிரமுகர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது
நவ. 03, 2026 4:27 முற்பகல் |
தூத்துக்குடி அருகே உள்ள சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(வயது 43) விசிக பிரமுகர், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி காலை அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஏற்கனவே பொன்பாண்டி (எ) பார் ரவி (44), சிவச்சந்திரன் (22), சிவக்குமார் (22), கோகுல்நாத் (24), மணிகண்டன் (20) ஆகிய 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாதா நகரைச் சேர்ந்த ரமேஷ்கண்ணன் (23) என்பவரைப் போலீசார் நேற்று (நவ 2) கைது செய்தனர்.





கருத்துக்கள்