திருநெல்வேலி தமிழ்நாடு உருவான நாளை ஒட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்-
நவ. 01, 2026 9:41 முற்பகல் |
திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பாக தமிழ்நாடு உருவான நாள் விழா திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது,
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் துணை தலைவர் வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் பண்பாட்டு மையத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் புத்தனேரி கோ செல்லப்பா பேராசிரியர் கட்டளை கைலாசம் மதார் முகைதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இந்த நாளின் முக்கியத்துவத்தை தமிழ் அறிஞர் பீட்டர் தாமிரபரணி ஆராய்ச்சியாளர் பொருநை மைந்தன் பாரதிதாசன் புன்னைச் செழியன் சுந்தரி வழக்கறிஞர் ஜெயசீலி ஆகியோர் பேசினர்
செயற்குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் நன்றி கூறினார்





கருத்துக்கள்