தூத்துக்குடி- மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
நவ. 02, 2026 7:38 முற்பகல் |
வடகிழக்கு பருவமழை காலமான தற்போது வங்கக்கடலில் 2-வது புயல் உருவாகி இருக்கிறது.புயலுக்கு 'முரசு' என பெயரிடப்பட்டு இருக்கிறது.
முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முரசு புயல் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





கருத்துக்கள்