advertisement

ராமநாதபுரம்- டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 முதன்மைத் தேர்வு

நவ. 01, 2026 9:31 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 முதன்மைத் தேர்வு நடைபெற்றதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ( டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 முதன்மைத் தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  சார்பில் நடத்தப்படும் குரூப்-2 முதன்மைத் தேர்வு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வினை எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 9,262 தேர்வர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர்.

  இத்தேர்வானது ராமநாதபுரம் வட்டத்தில் 18 மையங்களிலும், பரமக்குடி வட்டத்தில் 14 மையங்களிலும் நடைபெற்றது. ராமநாதபுரம் வட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,163 தேர்வர்களில் 4,109 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்றனர். 1,054 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.அதே போல், பரமக்குடி வட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 4,099 தேர்வர்களில் 3,367 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்றனர். 732 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9,262 தேர்வர்களில் 7,476 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்றனர். 1,786 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement