advertisement

முதல்-அமைச்சர் விஜய் புதுக்கோட்டை வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நவ. 01, 2026 9:16 முற்பகல் |

 

நாளை ல், 2-ந் தேதி (நாளை) புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலும், வரும் 3-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, வரும் 14-ந் தேதி நெல்லை மாவட்டம் அம்பாச முத்திரம் அரசுப்பள்ளியில் நடைபெற உள்ள குழந்தை கள் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. குழந்தைகளுக்கு அவர் கேக் வழங்குகி றார். அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் முதல்-அமைச் சர் விஜய், ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் நாளை புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், உள்விளையாட்டு அரங்கத்தை முதல்-அமைச்சர் விஜய் திறக்கவுள்ளார். தொடர்ந்து அரசு விழாவில் பங்கேற்கும் அவர் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முன்னதாக புதுக்கோட்டை நகரில் ரோடு ஷோ நடத்தி புதிய பேருந்து நிலையம் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய். முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு நாளை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் நாளை புதுக்கோட்டை வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement