advertisement

தூத்துக்குடி- குண்டர் சட்டத்தில் இதுவரை 129 பேர் கைது

நவ. 02, 2026 4:20 முற்பகல் |


 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை பகுதியினை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மாணிக்கம் (36). இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் குரும்பூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.

கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த மாணிக்கத்தைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரை செய்ததன்பேரில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாணிக்கத்தைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 129 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement