advertisement

அரசு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை !-கிராமசபையில் பொதுமக்கள் மனு

நவ. 02, 2026 4:43 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெய்வச்செயல்புரம் அருகேயுள்ள சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் நேற்று (நவ.1) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், விளையாட்டு மைதானம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஊராட்சி செயலர் சுடலைமணியிடம் வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளனர். ஆனால், முறையான விளையாட்டு மைதானம் இல்லாததால் அவர்கள் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ள இடமின்றி தவித்து வருகின்றனர். இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விளையாட்டு மைதானம் அவசியமாக உள்ளது.

எனவே, கிராமத்தில் பயன்பாடின்றி உள்ள அரசுக்குச் சொந்தமான சர்வே எண் 1463/2-ல் உள்ள நிலத்தைப் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்து, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். இதற்காக கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றி, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கை தொடர்பாக கிராமசபைக் கூட்டத்தில் சிறிது நேரம் விவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்கள் ஜெயராமன், பெருமாள் நாடார், சின்னசாமி, முத்துவேல், இசக்கிமுத்து, சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அரசு நிலத்தை இளைஞர்களின் விளையாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement