சில நிமிடங்களில் விற்று தீர்ந்த குமரி, தென்காசி தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06151), கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06152), தாம்பரம்- தென்காசி- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் (06049/06050) ஆகியவற்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 3) காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெயிட்டிங் லிஸ்ட் காட்டியதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வரும் நவம்பர் 5-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06151) மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வரும் நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06152), மறுநாள் நண்பகல் 12.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வரும் நவம்பர் 7- ஆம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்- தென்காசி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06049), மாலை 4.45 மணிக்கு தென்காசி ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், நவம்பர் 9- ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் (06050), மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.





கருத்துக்கள்